ஜி.எஸ்.டி. 2.0 : குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல்!!

ஜி.எஸ்.டி. 2.0 : குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல்!!
X

GST

ஜி.எஸ்.டி. குறைப்பு வருகிற 22-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல்

மிக அதிக வெப்பநிலை பால், சென்னா மற்றும் பனீர். ரொட்டி, பரோட்டா அனைத்துக்கும் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே இவற்றின் மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி அனைத்தும் பூஜ்ஜியமாகிவிடும். பென்சில், அழிப்பான், வரைபடங்கள், நோட்டு புத்தகங்கள், கலர் பென்சில் ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

மருந்து பொருட்கள்

மேலும் 33 உயிர்காக்கும் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக குறைந்துள்ளது. இதைப்போல தனிநபர் ஆயுள், சுகாதார காப்பீடு பிரீமியத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

வரி குறையும் பொருட்கள்

ஹேர் ஆயில், கழிவறை சோப்பு, சோப்பு பார்கள், ஷாம்புகள், பல் துலக்கும் பிரஷ், பற்பசை, சைக்கிள்கள், மேஜைப் பாத்திரங்கள், சமையலறைப் பாத்திரங்கள் மற்றும் பிற வீட்டுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது.

தையல் எந்திரம், நாப்கின், டயாபர், புஜ்ஜியா, சாஸ்கள், பாஸ்தா, உடனடி நூடுல்ஸ், சாக்லேட்டுகள், காபி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, கார்ன்பிளக்ஸ், வெண்ணெய், நெய் போன்றவை 12 சதவீதம் அல்லது 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகின்றன.

காலணிகள், ஆடைகள்

பாட்டில் குடிநீர் (20 லிட்டர்), பழஜூஸ்கள், பிஸ்கட், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள், சிலவகை காலணிகள், ஆடைகள், சைக்கிள், குடைகள், உலர் பழங்கள், உறைந்த காய்கறிகள், சைக்கிள், பாத்திரங்கள், சணல் மற்றும் பருத்தி கைப்பைகளும் விலை குறைகின்றன.

டிராக்டர்கள், விவசாயம், தோட்டக்கலை மற்றும் வனவியல் எந்திரங்கள், அறுவடை அல்லது கதிரடிக்கும் எந்திரங்கள், வைக்கோல் அல்லது தீவன பேலர்கள், புல் அல்லது வைக்கோல் நகர்த்தும் எந்திரங்கள், உரம் தயாரிக்கும் எந்திரங்கள் போன்ற விவசாயப் பொருட்கள் அனைத்தும் 12-ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகின்றன.

Next Story