பீகாரில் நவ. 6 மற்றும் 11ம் தேதி தேர்தல்!!

X
election commission
பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11ம் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
பிகாரில் சட்டப்பேரவை தேர்தல் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. 243 தொகுதிகளை கொண்ட மாநிலத்தில், 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வரும் நவ.6ம் தேதி நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நவ.11ம் தேதி நடக்கிறது நவ.14ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். வரும் 10ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் தேர்தல் அமைதியாக, வெளிப்படை தன்மையுடன் நடைபெறும், பீகார் மாநிலத்தில் மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியுள்ளார்.
Next Story
