12 மற்றும் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஜிஎஸ்டிக்கு மாற்றப்பட்ட பொருட்கள்!!

12 மற்றும் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஜிஎஸ்டிக்கு மாற்றப்பட்ட பொருட்கள்!!
X

Nirmala sitharaman

புதுடெல்லியில் புதன்கிழமை அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 2 அடுக்குகளாக ஜிஎஸ்டி வரி வரம்பை குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

வரும் 22ம் தேதி முதல் 5, 18 என்ற இரண்டு விகிதங்களில் மட்டுமே ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். 12 மற்றும் 28 விகிதங்கள் நீக்கப்பட்டுள்ளன. தனிநபர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், உயிர் காக்கும் மருந்துகளுக்கு இனி ஜிஎஸ்டி வரி இல்லை. இதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கல்வி சார்ந்து எழுதுபொருளான பென்சில், ஷார்ப்னர், கிரேயான்ஸ், நோட்டுப்புத்தகம், எரேசர், வரைபடங்கள், சார்ட் உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி வரியில் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், பான் மசாலா, குட்கா, இனிப்பு கலந்த பொங்கலுக்கு 40% சிறப்பு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும். 350 சிசி திறன் மற்றும் அதற்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்கள், சொகுசு கார்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும்.

வரி இல்லை (முன்பு 5%)

பனீர், இந்திய ரொட்டிகள் (சப்பாத்தி, ரொட்டி பராத்தா)


12 மற்றும் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஜிஎஸ்டிக்கு மாற்றப்பட்ட பொருட்கள்:

1. ஆட்டோமொபைல் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% குறைக்கப்படுகிறது. இதற்கு முன்னர் இது 28% இருந்தது.

2. டிராக்டர் டயர்ஸ் - டிராக்டர் உதிரி பாகங்கள்

3. சொட்டு நீர் பாசன கருவி மற்றும் தெளிப்பான்கள்

4. விவசாய உபகரணங்களுக்கு 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

5. குறிப்பிட்ட உயி்ர் பூச்சிக்கொல்லி மருந்து

6. தினசரி மக்கள் பயன்படுத்தும் ஹேர் ஆயில், ஷாம்பு, டூத் பேஸ்ட், சோப்பு, ஷேவிங் கிரீம் உள்ளிட்டவற்றுக்கு 5% ஜிஎஸ்டி வரி மட்டுமே வசூலிக்கப்படும்.

28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதத்திற்கு மாற்றப்பட்ட பொருட்கள்:

1. பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட், எல்பிஜி, சிஎன்ஜி கார்கள் - 1200 சிசிக்குள் இருக்க வேண்டும், 4 ஆயிரம் மி.மீட்டருக்குள் வடிவம் இருக்க வேண்டும்

2. டீசல் மற்றும் டீசல் ஹைப்ரிட் கார்கள் - 1500 சிசிக்குள் இருக்க வேண்டும், 4 ஆயிரம் மி.மீட்டருக்குள் வடிவம் இருக்க வேண்டும்

3.ஆட்டோமொபைல் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% குறைக்கப்படுகிறது. இதற்கு முன்னர் இது 28% இருந்தது.

4. ஏசி, டிவி, கார் உள்ளிட்டவற்றுக்கு 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

உயிர்காக்கும் மருந்து

பராத்தாவிற்கு இனி 0 ஜிஎஸ்டி வரி மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயிர்காக்கும் மருந்துகளுக்கும் இனி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படாது. பேண்டேஜ் போன்ற மருத்துவ உபகரணங்களுக்கு 5 சதவீத வரி மட்டுமே வசூலிக்கப்பட உள்ளது.

கார் மட்டுமின்றி ஏசி மற்றும் டிவி மீதான ஜிஎஸ்டி-யும் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை தடாலடியாக மத்திய அரசு குறைத்துள்ளது.

மத்திய அரசு விதித்துள்ள இந்த புதிய வரியில் சில பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி வரும் 22ம் தேதி முதல் அமலாக உள்ளது. மத்திய அரசின் இந்த புதிய ஜிஎஸ்டி வரி விகிதத்தில் விவசாய, வீட்டு உபயோக மற்றும் கார் பொருட்களின் விலை மிகப்பெரிய அளவில் குறைய உள்ளது.

Next Story