கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.14 கோடிக்கு மது விற்பனை!!

கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.14 கோடிக்கு  மது விற்பனை!!
X

கள்ளத்தனமாக மது விற்பனை 

கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி 14 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

கேரள மாநிலத்தில் புத்தாண்டு மற்றும் ஓணம் பண்டிகையின் போது மது விற்பனை எப்போதும் அதிகளவில் இருக்கும். இந்த ஆண்டு நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. வயநாடு நிலச்சரிவு உயிர்ப்பலி காரணமாக அரசு சார்பில் ஓணம் கொண்டாட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கேரள மக்கள் ஓணம் பண்டிகைக்கு கடந்த சில நாட்களாக தயாராகி வந்தனர். எனவே வழக்கம் போல் மது விற்பனையும் அதிகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு மாநிலத்தில் பார்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. ஆனால் உத்ராடம் வரையிலான 9 நாட்களில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது மது விற்பனை குறைந்தே உள்ளது. கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் ரூ.715 கோடிக்கு மது விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.701 கோடிக்கு தான் விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.14 கோடி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் ஓணம் நாளில் மட்டும் ரூ.124 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.4 கோடி அதிகமாகும்.

Tags

Next Story