அரசு மருத்துவமனைகளில் 65 லட்சம் பாரசிட்டமால் மாத்திரைகள் முடக்கம்!!
X
மருந்துகள் விற்பனைக்கு தடை
அரசு மருத்துவமனைகளில் 65 லட்சம் பாரசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கேரள மருத்துவ சேவை கழகம் மூலமாக மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் பாரசிட்டமால் மற்றும் பான்டோபிரசோல் மாத்திரைகள் தரமற்றதாக இருப்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில் சில மாத்திரைகளை கவரை பிரித்து பார்த்தபோது தூளாகவும், பூஜ்ஜையுடனும் இருந்தது. இதையடுத்து ஒவ்வொரு தொகுதியில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காக மாநில மருந்தக கட்டுப்பாட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டன. மேலும் 65 லட்சம் மாத்திரைகள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
Next Story