டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு!!
X
delhi israeli embassy
இஸ்ரேல் மீது ஈரான், ஏவுகணை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
இஸ்ரேல் மீது ஈரான், ஏவுகணை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் எதிரொலியாக டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் துக்ளக் ரோட்டில் அமைந்துள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில் 2 முறை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தற்போது பாதுகாப்பு முன்பை விட பலப்படுத்தப்பட்டு உள்ளது. தூதரகத்தை சுற்றிலும் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். முந்தைய குண்டு வெடிப்பு சம்பவங்களில் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story