2025-26ம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

2025-26ம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!!
X

Finance Minister Nirmala Sitharaman

2025-26ம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ கூட்டணி அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதையொட்டி, பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தார். இதைத் தொடர்ந்து தனது 8வது ஒன்றிய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதற்கு முன்னதாக, நிதியமைச்சக நுழைவு வாயிலில் பட்ஜெட் தயாரிப்பு குழுவினருடன் பட்ஜெட் ஆவணங்களை கையில் ஏந்தியபடி நிர்மலா சீதாராமன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதன் தொடர்ச்சியாக நிதி அமைச்சக அதிகாரிகளும் மத்திய நிதியமைச்சருடன் குடியரசுத் தலைவர் மாளிகை வந்தனர். அங்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் விவரங்களை தெரிவித்தார். மேலும் குடியரசு தலைவரிடம் நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார். இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து 2025-2026ம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

Tags

Next Story