சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

நாமக்கல் மாவட்டக் காவல் அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஸ் கண்ணன் தலைமையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் தனியார் பயணிகள் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு சம்பந்தமான கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேருந்துகளில் பயணிகளின் உடைமைகள் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் சம்பவங்களில் ஈடுபவர்களைக் கண்டுபிடிக்கவும், விபத்தின் காரணங்களை எளிதில் கண்டுபிடிக்கவும் CCTV கண்காணிப்பு கேமரா பொருத்துவதன் முக்கியத்துவம் குறித்தும், தனியார் வாகனங்களில் வரும் பார்சல்களில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் வர வாய்ப்புள்ளதால் அதை தவிர்க்க பார்சல்களின் உண்மை தன்மையை சோதித்த பின்னரே பார்சல்களை பெற வேண்டும், இதனால் போதை பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரது சேவையும் தேவைப்படுவதால் ஒத்துழைப்பு வழங்கவும்,

வாகனங்களில் அதிக ஒலியுடன் கூடிய இசையை கேட்பதால் ஒட்டுநர்களுக்கு கவன சிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் அதிக ஒலி இசைப்பதை தவிர்க்குமாறும், அனைவக்கும் சேவை மனப்பான்மை இருப்பதால் ஓட்டுநர்கள் சரியான வேகத்தையும், நேரத்தையும் கடைப்பிடிப்பதன் மூலம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கலாம் என்றும் மேலும் விபத்து ஏற்படா வண்ணம் தவிர்க்கலாம் என்று ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள் வழங்குமாறும் கூறினர். மேலும் கட்டுப்பாடான வேகத்தில் வாகனங்களை இயக்குவது, சாலை விபத்துக்களை தவிர்ப்பது மற்றும் சாலை விதிகளை முறையாக பின்பற்றுவது மற்றும் இணைய வழி குற்றங்கள் (Cyber Crime) குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினார். இணைய வழி குற்றங்கள் (Cyber Crime) தொடர்பாக 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரைகளை வழங்கினார். இக்கூட்டத்தில் சுமார் 150 உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story