ஆடி பண்டிகையை தேங்காய் சுட்டு கொண்டாடியும் பொதுமக்கள்

சங்ககிரி: ஆடிப் பண்டிகையை பொதுமக்கள் தேங்காய் சுட்டுக் கொண்டாட்டம்....
சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதிகளில் ஆடி மாதம் முதல் பிறப்பிபை முன்னிட்டு தேங்காய் சுடும் பண்டிகையை குழந்தைகள், புதுமண தம்பதிகள், சமூக ஆர்வலர்கள் சிறப்பாக கொண்டாடினர். ஆடி மாதம் பிறப்பை குழந்தைகள், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், குடும்பத்துடன் அழிஞ்சி குச்சிகளை வாங்கி வந்து தேங்காய்களை தரையில் உரைத்து மேல்பகுதியில் மூன்று கண்கள் உள்ளதில் ஒரு பகுதியில் தூவாரமிட்டு உள்ள இருக்கும் நீரை வெளியே எடுத்தப்பின்னர் நாட்டுச்சர்க்கரை, அவல், பொட்டுக்கடலை, பாசிப்பயிறு, எள், உள்ளிட்ட பொருள்களை கலந்து உள்ளே செலுத்தி பின்னர் அழிஞ்சி குச்சியை கொண்டு மூடிய பின்னர் தேங்காய், குச்சிகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு அனைவரும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியுடன் தேங்காய்களை சுட்டு எடுத்துச்சென்று அப்பகுதிகளில் உள்ள விஜயவிநாயகர் சுவாமிக்கு படைத்து வழிப்பட்டனர். சங்ககிரி நகர் பகுதிகளில் உள்ள தில்லை விநாயகர், ஸ்ரீ அல்லி குண்டம் மாரியம்மன், சிவியார் மாரியம்மன், அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில், உள்ள சுவாமிகளை பக்தர்கள் குடும்பத்துடன் வழிபட்டுச் சென்றனர். புதுமணதம்பதிகள் புத்தாடைகளை உடுத்தி பெற்றோர்களுடன் சேர்ந்து தேங்காய்களை சுட்டு சுவாமிக்கு படைத்து வழிப்பட்டுச் சென்றனர்.
Next Story