முனியப்பன் கோவிலில் ஆடித்திருவிழா துவக்கம்

குமாரபாளையம் முனியப்பன் கோவிலில் ஆடித்திருவிழா துவங்கியது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலை சரவணா தியேட்டர் எதிரில் உள்ள முனியப்பன் கோவிலில் ஆடித்திருவிழா விநாயகர் பூஜை, கொடியேற்றத்துடன் துவங்கியது. உலக நன்மை வேண்டி யாக வேள்வி நடத்தப்பட்டது. இதனை பவானி சங்கமேஸ்வரர் கோவில் அர்ச்சகர் சுவாமிநாத சிவாச்சாரியார், பவானி, பழனியாண்டவர் கோயில் அர்ச்சகர் ஸ்த்யோஜாத வேத சங்கர சிவாச்சாரியார், நடத்தினர். கோவிலில் உள்ள ராஜகணபதி, முனியப்ப சுவாமி, கருப்பண்ண சுவாமி, கன்னிமார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. ஜூலை 27 முதல் ஆக. 2 வரை தினமும் மாலை 05:00 சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்படவுள்ளன. ஆக. 2ல் சிறப்பு யாகம், பவானி சங்கமேஸ்வரர் கோவில் முக்கூடலிலிருந்து மேள தாளங்கள் முழங்க புனித நீர் எடுத்து வருதல், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறவுள்ளன. இரவு 07:00 மணிக்கு அன்னதானம், இரவு 10:00 மணிக்கு சக்தி பெரியதா?, கங்கை பெரியதா? எனும் கிராமிய தெருக்கூத்து நடைபெறவுள்ளது. ஆக. 3ல் சிறப்பு அபிசேக, அலங்கார, ஆராதனைகள், பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றுதல், மறு பூஜை நடைபெறவுள்ளது. ஆக. 4ல் அமாவாசை சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
Next Story