திருப்பத்தூரில் நிதிநிலை அறிக்கையை கண்டித்து, திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழகத்திற்கு துரோகம் விளைவிக்க மத்திய நிதி அமைச்சருக்கும், பிரதமருக்கும் வேலையாக உள்ளது,
திருப்பத்தூர் மாவட்டம் தமிழகத்திற்கு துரோகம் விளைவிக்க மத்திய நிதி அமைச்சருக்கும், பிரதமருக்கும் வேலையாக உள்ளது, இந்த நிதி நிலை அறிக்கை வாக்கு வங்கி அரசியல், 7 முறை தமிழகம் வந்த பிரதமர் 7 சதவிகத வாக்கு கூட வாங்கவில்லை, திருப்பத்தூரில் நிதிநிலை அறிக்கையை கண்டித்து, திமுக சார்பில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை பேச்சு.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு நிதி ஒதுக்காததை கண்டித்தும், பாஜக அரசுக்கு எதிராகவும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, மத்திய பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணித்து வருகிறது, இது ஒரு போலியான பட்ஜெட், தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு 8.75 சதவிகிதம் வரி அளித்து இந்தியாவிலேயே இரண்டாவது மாநிலமாக உள்ளது, ஆனால் 8 லட்சம் கோடி வரி அளித்தும், ஒன்றிய அரசு 1 லட்சம் கோடி தான் திருப்பி தருகிறார்கள், வேலை வாய்ப்பிலும் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது, இந்த நிதிநிலை அறிக்கை என்பது வாக்கு வங்கி அரசியல், 7 முறை தமிழகத்திற்கு வந்த பிரதமர் 7 சதவிகத வாக்குகூட வாங்க வில்லை, தமிழ்நாட்டில் பிறந்து, தமிழகத்தை புறக்கணிக்கின்றார் ஒன்றிய நிதி அமைச்சர், தமிழகத்திற்கு துரோகம் விளைவிக்க ஒன்றிய நிதி அமைச்சருக்கும், பிரதமருக்கும், வேலையாக உள்ளது, பாஜக ஆளுகின்ற மாநிலங்களிலேயே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளது.. இந்த செவிட்டு, அரசிற்க்கும், குருட்டு அரசிற்கும், இந்த போராட்டம் தெரிய வேண்டும் என கடுமையாக விமர்சித்தார்.. மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் சோலையார்பேட்டைதேவராஜ். திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர். நல்லதம்பி. ஆம்பூர் சட்டமன்றவில்வநாதன். திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன். மாவட்ட துணைச் செயலாளர் டி கே மோகன். மாவட்ட பொருளாளர் கே பி ஜோதிராஜ். முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ் செல்வி வாணியம்பாடி நகர செயலாளர் சாரதி குமார் நாட்றம்பள்ளி ஒன்றிய செயலாளர் மேற்கு என் கே ஆர் சூர்யா குமார் சோலையார்பேட்டை நகர செயலாளர் அன்பழகன். ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர். கவிதா தண்டபாணி . உமா கன் ரங்கம் எஸ் கே சதீஷ்குமார். கந்திலி ஒன்றிய செயலாளர்கள் முருகேசன் மோகன்ராஜ் குணசேகரன் அசோக் குமார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல். மாவட்டம் மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் டி என் டி கே சுபாஷ். டி சி கார்த்தி. நெசவாளர் அணி தசரதன். உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்..
Next Story