பழ லோடு ஏற்றி வந்த வேன் டயர் வெடித்து விபத்து - பழங்கள் சாலையில் சிதறியது.

பழ லோடு ஏற்றி வந்த வேன் டயர் வெடித்து விபத்து - பழங்கள் சாலையில் சிதறியது.
X
விபத்து
வாலாஜாபேட்டை அருகே பழங்களை ஏற்றுக் கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த வேன் டயர் வெடித்து சாலையில் தல குப்புற கவிழ்ந்து விபத்து. பழங்கள் சாலையில் சிதறி கிடந்ததால் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை போக்குவரத்து பாதிப்பு.. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த நாமக்கல் பெட்ரோல் பங்க் அருகே வேலூரில் இருந்து சென்னை நோக்கி நான்கு டன் மதிப்புள்ள மாதுளை பழங்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த   வேன் திடீரென சாலையில் டயர் வெடித்து தலை குப்புற கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது மேலும் வேனில் கொண்டு சென்ற மாதுளை பழங்கள் அனைத்தும் சாலைகளில் சிதறி காணப்பட்டது.. இதனையடுத்து தகவலின்  பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய நெடுஞ்சாலை துறையினர் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கிரேன் உதவியோடு சாலையில் கவிழ்ந்து கிடந்த வேனை அப்புறப்படுத்தினர் தொடர்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் உதவியோடு சாலையில் சிதறி கிடந்த பழங்கள் அனைத்தும் சேகரித்தனர்.. இதனால் வேலூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேலும் இதுகுறித்து வாலாஜாபேட்டை போலிசார் விபத்து ஏற்படுத்திய சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த விபத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சித்தன் வயது (21) என்பவர் வேலை ஓட்டிச் சென்றதால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது..
Next Story