ரத்தினகிரி கோவிலில் பரணி காவடி விழா நடைபெற்றது

காவடி
ரத்தனகிரி அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் ஆடி பரணி முன்னிட்டு புஷ்ப மலர்களாலும் சிறப்பாக கல் அங்கி அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பகுதியில் மிகவும் பிரதிஷ்டை பெற்ற திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் ஆடி பரணியை நிகழவை முன்னிட்டு கோவில் கருவறையில் உள்ள பாலமுருகனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, பன்னீர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.. அதனைத்தொடர்ந்து ஆடி பரணியை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து நீண்ட வரிசையில் நின்றபடி காத்திருந்து முருகப்பெருமானை அரோகரா.. அரோகரா.. அரோகரா.. என பக்தி முழக்கங்களை வெளிப்படுத்தி சுவாமி வழிபட்டு சென்றனர் தொடர்ந்து கோவில் முழுவதும் பல்வேறு புஷ்ப மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு முருகப்பெருமான் கல் அங்கி அலங்காரத்தில் கூடியிருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரகாசமாக காட்சி அளித்து அருள்பாலித்து காட்சியளித்தார்.
Next Story