வேலூர்: ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை!

வேலூர்: ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை!
X
அரியூர் அருகே ஆட்டோ டிரைவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் சத்துவாச்சாரி நேருநகரை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 50). அரியூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி பத்மாவதி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீட் டில் உள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான பரசுராமன், வீட்டுக்கு சரிவர செல்ல வில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் பரசுராமன் ஊசூரில் இருந்து ஜமால்புரம் செல்லும் சாலையில் ஆட்டோ ஓட்டி சென்றார். திடீரென அவர் சாலையோரம் நிறுத்திவிட்டு ஆட்டோவில் இருந்த பெட்ரோல் கேனை எடுத்து சிறிது தூரம் நடந்து சென்று உடல் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி சென்றனர். அதற்குள் பரசுராமன் தீயில் கருகி பலியானார். தகவலறிந்த அரியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன், சப்-இன்ஸ் பெக்டர் குமரன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,இதுகுறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story