மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் என்பது அனைத்து மாநிலங்களுக்கான பட்ஜெட் தான் - பாஜக தமிழிசை சவுந்தராஜன் பேட்டி.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் என்பது அனைத்து மாநிலங்களுக்கான பட்ஜெட் தான் - பாஜக தமிழிசை சவுந்தராஜன் பேட்டி.
X
அரசியல்
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் என்பது அனைத்து மாநிலங்களுக்கான பட்ஜெட் தான் - குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரியில் உள்ள புகழ்பெற்ற பாலமுருகன் ஆலயத்தில் இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலையில் இருந்து நடை திறக்கப்பட்டு மூலவருக்கு பால், தயிர், பன்னீர் சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிரதான பக்தர்கள் காவடி எடுத்தும் வேல் குத்தியும், வருகை தந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடன்களை செலுத்தினர். குறிப்பாக முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தனது கணவருடன் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்ய வந்த அவரை, பாஜக நிர்வாகிகளும், கோவில் நிர்வாகமும் சிறப்பாக வரவேற்றனர். சாமி தரிசனம் செய்த பின்னர் தெரிவிக்கையில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் என்பது அனைத்து மாநிலங்களுக்கான பட்ஜெட் தான், அனைத்து திட்டங்களின் வாயிலாக தமிழகமும் நலன் பெறும் என தெரிவித்தார். கடந்த முறையை காட்டிலும் நாட்டின் வளர்ச்சிக்காக ரயில்வே உட்பட பல்வேறு துறைகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதே போல, ஒவ்வொரு மாநிலத்தின் முதலமைச்சர்களும் நிதிஆயோக் கூட்டத்தில் முறையாக பங்கேற்று, தங்களது மாநிலங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என கூறினார். ஆனால், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஜீரோ என திமுகவினர் குற்றம் சாட்டுவது அப்பட்டமான அரசியல் எனும், இதன் மூலம் தமிழக மக்களை திசை திருப்ப முயற்சிப்பதாக குற்றம் சாட்டியா அவர், தமிழக முதல்வர் இந்த போக்கினை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்
Next Story