ஆடி கிருத்திகை முன்னிட்டு தப்ப தேர்த்திருவிழா ரத்தினகிரியில் கோலாகலம்

தெப்பல் தேர்
ஆடி மாத கிருத்திகையொட்டி ரத்தினகிரி அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் தெப்ப உற்சவ திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா.. அரோகரா.. என பக்தி முழக்கம் சாமி தரிசனம்.   ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பகுதியில்  அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் ஆடி கிருத்திகை திருநாளை முன்னிட்டு தெப்ப உற்சவ திருவிழா வெகு விமர்சையாக பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது இதில் சுவாமி பாலமுருகனுக்கு இன்று அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், குங்குமம், விபூதி, உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்து சுவாமி திருவீதி உலா நடைபெற்ற பின்னர் பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் காவடி எடுத்து வருகை தந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்   இதனைத்தொடர்ந்து இரவு 7 மணி அளவில் ஸ்ரீ பாலமுருகன் உற்சவருக்கு பல்வேறு வாசனை கலந்த மலர் மாலைகளால் அலங்கரித்து தங்க ஆபரணங்களுடன் ரதத்தில் அமர்ந்தவாறு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு வந்து கோவில் அருகே உள்ள பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள அறுகோண தெப்பக்குளத்தில் அமர வைத்து குளத்தை மூன்று முறை வலம் வந்து கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது..   இந்த ஆடி கிருத்திகை தெப்ப உற்சவ திருவிழாவில் ராணிப்பேட்டை மாவட்டமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தெப்பக்குளத்தின் அருகே கூடி நின்று அரோகரா.. அரோகரா.. அரோகரா.. என பக்தி முழக்கங்களை வெளிப்படுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story