குடிநீர் விநியோகம் செய்யப்படுவது குறித்து வாரிய மேலாண்மை இயக்குனர் ஆய்வு

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வ.தக்ஷிணாமூர்த்தி, காவிரி ஆற்றில் வெள்ள உபரி நீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் ஊராட்சி ஒன்றியம், ஜேடர்பாளையத்தில் உள்ள தலைமை நீரேற்று நிலையம், தடுப்பணை நீர் வரத்து ஆகியவை குறித்து 1.8.2024 அன்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வ.தக்ஷிணாமூர்த்தி, , நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் 13 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் இயங்கி பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது பராமரிப்புக் கோட்டம் நாமக்கல் மூலம் 10 கூட்டுக் குடிநீர் திட்டங்களும், கிராம குடிநீர் திட்ட கோட்டம் மூலம் 3 கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 9 பேரூராட்சிகள் 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பொதுமக்களுக்கு நாள்தோறும் திட்ட வடிவமமைக்கப்பட்டுள்ளபடி பராமரிப்புக் கோட்டம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 66.212 மி.லி நாள்தோறும், மேற்கண்ட அனைத்து கூட்டுக் குடிநீர் திட்டங்களிலிருந்து பாதுகாகக்கப்பட்ட ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளிலிருந்து சுமார் 1.75 இலட்சம் கனஅடி நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது. மேற்படி வெளியேற்றப்படும் நீரின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமானது 120 அடி என்ற முழுக்கொள்ளளவினை அடைந்துவிட்டதால், சுமார் 1.75 இலட்சம் கனஅடி நீரானது காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்காரணமாக காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் அவர்கள் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 4 கூட்டுக் குடிநீர் திட்டங்களில் உள்ள நீர் உறிஞ்சும் கிணறுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், கபிலர்மலை ஒன்றியங்களிலுள்ள 14 ஊராட்சிகளில் உள்ள 67 ஊரக குடியிருப்புகளுக்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்வது குறித்தும், கபிலர்மலை தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து லாரி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பரமத்தி வேலூர் ஊராட்சி ஒன்றியம், பட்லூரில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலம் ஊராட்சி, அரசம்பாளையத்தில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அதனைத்தொடர்ந்து, பட்லூர் பகுதியில் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதை பார்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.வ.தக்ஷிணாமூர்த்தி, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் கு.செல்லமுத்து, மேற்பார்வைப் பொறியாளர் அ.ஜெயக்குமார், துணை மேற்பார்வைப் பொறியாளர் ந.ஜெயகோபு, நிர்வாகப் பொறியாளர் .பி.பிரபாகரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story