கொடைக்கானல் கூக்கால் மலைக்கிராமத்தில் அரசு வருவாய் நிலத்தில் அனுமதியின்றி மரங்களை வெட்டி கடத்த முயன்ற லாரி மற்றும் மரக்கட்டைகளை வருவாய் துறையினர் பறிமுதல்

மரங்கள் வெட்டிய பெண் உள்ளிட்ட 4 நபர்கள் மீதும் நடவடிக்கை.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக மரங்கள் வெட்டுவதற்கு உரிமமும், மரங்களை கொண்டு அனுமதி சீட்டுடன் மரங்கள் வெட்டப்பட்டு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வருகிறது, இந்நிலையில் கொடைக்கானல் ஆனைமலை புலிகாப்பகத்திற்கு உட்பட்ட கூக்கால் மலைக்கிராமத்தில் இருந்து அனுமதியின்றி மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு வினோத் குமார் என்பவர் புகார் அளித்துள்ளார்,இதன் அடிப்படையில் கூக்கால் கிராமத்திற்கு விரைந்த வருவாய் துறையினர் மரங்கள் வெட்டப்பட்டதற்கு உரிமம் இல்லாத காரணத்தினால் கட்டைகளோடு லாரியை பறிமுதல் செய்து கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்,இதனை தொடர்ந்து மரங்கள் அனுமதி இல்லாமல் வெட்டப்பட்டு உள்ளதா என கோட்டாட்சியர் சிவராமன் ஆய்வு மேற்கொண்டார்,இதன் அடிப்படையில் அரசு வருவாய் நிலத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்ட தெரியவந்ததையடுத்து,லாரியில் இருந்து கட்டைகள் அகற்றப்பட்டு,லாரியும்,மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர், மேலும் கட்டைகள் அடிப்படையில் அபராதம் விதிக்க இருப்பதாக வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர், மேலும் அரசு வருவாய் நிலத்தில் அனுமதியின்றி மரம் வெட்டியதற்காக வினோத் குமார், ரெட்டிகா,அய்யனார், முகமது சேட் உள்ளிட்ட 4 நபர்கள் மீது காவல் நிலையத்தில் வருவாய் துறையினர் புகார் அளித்துள்ளனர், மேலும் கட்டைகள் லாரியில் ஏற்றும் இடத்தில் வன காவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டு கட்டைகள் கொண்டு செல்லும் அனுமதி சீட்டில் கையெழுத்து இடுவது வழக்கம்,இந்நிலையில் வனகாவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டார என இயற்கை ஆர்வலர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. மேலும் இந்த மரம் வெட்டி கடத்த முயன்ற விவகாரத்தில் புகார் அளித்த வினோத் என்பவர், அரசு வருவாய் நிலத்தில் மரங்களை வெட்டியுள்ளார்,பண தகராரில் வருவாய் துறையிடம் புகார் அளித்து, இவர் மீது வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Next Story