கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டி மூலம் விழிப்புணர்வு

மலைப்பகுதிகளில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டி மூலம் மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு பயணம் துவக்கம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் (நெகிழி) பயன்பாட்டை தவிர்த்து,மஞ்சப்பை உபயோகப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு முறை பயன்படுத்தப்படும் நெ கிலிக்கு எதிராக இன்று பேருந்து நிலையத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டி ( புகையில்லா இரு சக்கர வாகனம் ) மூலம் மஞ்சப்பை படையணிகள் வாகன பிரச்சார துவக்க விழா நடைபெற்றது, இந்த விழாவினை கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை கொடியசைத்து துவக்கி வைத்தார், மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் முனைவர் குணசேகரன் மற்றும் உதவி பொறியாளர்கள் உஷா ராணி மற்றும் அனிதா அவர்களின் ஒருங்கிணைப்பில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டி மூலம் கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் சுமார் 100 கிலோ மீட்டர் பயணம் சென்று மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்தும் பிளாஸ்டிக் தடை செய்யப்படுவது குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய த்தினர் தெரிவித்துள்ளனர்,மேலும் இந்த மஞ்சப்பை விழிப்புணர்வு படையணிகளை ஒரு வருடத்திற்கு பிறகு நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
Next Story