ஆழ் கடலில் சூறைக்காற்றில் சிக்கி மீன் பிடி தொழிலாளி பலி.

ஆழ் கடலில் சூறைக்காற்றில் சிக்கி மீன் பிடி தொழிலாளி பலி.
X
தேங்காய் பட்டணம் அருகே ஆழ் கடலில் சூறைக்காற்று வீசியதில் படகில் விழுந்து மீன்பிடித் தொழிலாளி பலி.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டணம் துறைமுகத்தை தங்குதலமாக கொண்டு ஏராளமான மீன்பிடி படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த துறைமுகத்தில் இருந்து தூத்தூர் பகுதியை சேர்ந்த ஷாஜி மற்றும் அவரது சகோதரர்கள் உட்பட 8 பேர் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர் ஆள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அதிகாலை பலத்த காற்று வீசி உள்ளது அப்போது படகில் இருந்த மீனவர் ஷாஜி நிலை தடுமாறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி உள்ளார் உடன் இருந்தவர்கள் அவரை படகு மூலம் ஆழ் கடலில் இருந்து கரைக்கு கொண்டு வந்துள்ளனர் ஆனால் வரும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் உடன் இருந்தவர்கள் அவரை தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்கு இன்று காலை கொண்டு வந்தனர்.பின்னர் அவரது உடல் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story