கொடைக்கானல் வட்டக்கானலில் இறக்கமான சாலையில் சொகுசு வாகனத்தை பின்னோக்கி நிறுத்தி,முன் பக்கம் இயக்க முற்பட்ட போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்து விபத்து

இறக்கமான சாலையில் சொகுசு வாகனத்தை பின்னோக்கி நிறுத்தி,முன் பக்கம் இயக்க முற்பட்ட போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் பின் நோக்கி சென்று கவிழ்ந்து விபத்து,சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெங்களூர் சுற்றுலாப்பயணிகள்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக வட்டக்கானல் பகுதி உள்ளது, இந்த பகுதிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து இங்குள்ள இயற்கை காட்சிகளையும் சுற்றுலா தளங்களையும் கண்டு செல்வார்கள்,மேலும் இங்கு கார் பார்க்கிங் இல்லாத காரணத்தினாலும், ஒரு வாகனம் மட்டும் சென்று வரும் குறுகிய சாலையாக இருப்பதால் அடிக்கடி இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும், மேலும் இந்த சாலையில் சுற்றுலாப்பயணிகள் வாகனம் இயக்கி செல்வது மிகவும் சிரமமாக இருக்கும், இந்நிலையில் இன்று பெங்களூர் பகுதியில் இருந்து 8 சுற்றுலாப்பயணிகள் சைலோ சொகுசு வாகனத்தில் சுற்றுலாவிற்கு வருகை புரிந்து வட்டக்கானல் பகுதிக்கு சென்றுள்ளனர், அப்போது அவர்கள் சென்ற வாகனத்தின் எதிரே ஒரு வாகனம் வந்துள்ளது, மேலும் பின் தொடர்ந்து வாகனம் வந்துள்ளதால் பின்னோக்கி செல்ல முடியாத நிலையில்,இறக்கமான சாலையில் பெங்களூர் சுற்றுலா பயணிகள் வந்த வாகனம் சாலையில் பின்னோக்கி சென்று நிறுத்தப்பட்டு இருந்ததாக இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர், ஓட்டுனர் மீண்டும் வாகனத்தை முன் பக்கம் இயக்குவதற்கு முயன்ற போது,ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் இறக்கமான சாலையில் நிறுத்தப்பட்டதால் பின்னோக்கி சென்று வாகனம் சுமார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது, இதனை தொடர்ந்து வாகனத்தில் இருந்த பெங்களூர் சுற்றுலாப்பயணிகள் சிறு சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர், அத்துடன் தாங்களாகவே வாகனத்தில் இருந்து வெளியிலும் வந்தனர், இதனையடுத்து மலைச்சாலையில் வாகனங்களை இயக்கும் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த கவனத்துடன், பாதுகாப்பாகவும் வாகனங்களை இயக்க போக்குவரத்து காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர், மேலும் இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வட்டக்கானல் பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் வாகனம் கவிழ்ந்ததால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story