கும்பகோணத்தில் தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

கும்பகோணத்தில் தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
X
கும்பகோணத்தில் தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
கும்பகோணத்தில் அதிமுக சார்பில் செயல்வீரர் கூட்டம் மற்றும் உறுப்பினருக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்கே பாரதி மோகன் தலைமையில் நடைபெற்றது. கும்பகோணத்தில் அதிமுக சார்பில் 0 செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினருக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.பாரதி மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் உணவுத்துறை அமைச்சருமான காமராஜ், கலந்துகொண்டு உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டைகளை வழங்கி வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் ஆலோசனையும் வழங்கினார் . இந்த கூட்டத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ளடக்கிய மயிலாடுதுறை தொகுதி உட்பட்ட 40 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்த கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் மாண்புமிகு டாக்டர் எடப்பாடியார் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் உள்ளடக்கிய ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . இதில் மாநகர செயலாளர் ராம ராமநாதன், அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் AVK . அசோக் குமார், ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன், முத்துகிருஷ்ணன், நிர்வாகிகள் , பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story