திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் பெய்த மழை

திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழை காற்றுடன் பெய்த மழையின் காரணமாக 3- மணி நேரம் மின்சார நிறுத்தம் பொதுமக்கள் அவதி,, திருத்தணி முருகன் கோயில் மலை மீது காற்றுடன் பெய்த மழையின் காரணமாக ஹெல்மெட் போட்டு கொண்டு பணி செய்த கோயில் ஊழியர்கள்
திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழை காற்றுடன் பெய்த மழையின் காரணமாக 3- மணி நேரம் மின்சார நிறுத்தம் பொதுமக்கள் அவதி,, திருத்தணி முருகன் கோயில் மலை மீது காற்றுடன் பெய்த மழையின் காரணமாக ஹெல்மெட் போட்டு கொண்டு பணி செய்த கோயில் ஊழியர்கள், மலைக்கோவிலில் பக்தர்கள் காலணிகள் வைத்த இரும்பு இருக்கை சாய்ந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பக்தர்கள்., திருக்கோயில் நிர்வாகத்தின் அலட்சியம் பக்தர்கள் குற்றச்சாட்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, ஆர்.கே. பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, அம்மையார்குப்பம், கே.ஜி. கண்டிகை, போன்ற பகுதிகளில் காற்றுடன் பெய்த மழை இந்த திடீரென்று காற்றுடன் பெய்த மழையின் காரணமாக திருத்தணி முருகன் கோயில் மலைக் கோயிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு கட்டணங்கள் வசூல் செய்யும் திருக்கோயில் ஊழியர்கள் பணியில் இருந்த பகுதியில் காற்றுடன் மழை பெய்ததால் மழையில் நனையாமல் இருக்க மழை முகத்தில் படாமல் இருக்க ஹெல்மெட் போட்டு கொண்டு பணியில் ஈடுபட்டனர் திருக்கோயில் ஊழியர்களுக்கு மழையில் இருந்து பாதுகாக்க திருக்கோயில் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கோயில் ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்தனர் திருத்தணி முருகன் கோயிலில் காற்றுடன் பெய்த மழையின் காரணமாக பக்தர்கள் காலணிகள் விட்டுச் செல்லும் பகுதியில் இரும்பு இருக்கை 300 கிலோ எடை கொண்டது திடீரென்று காற்றில் சாய்ந்து பக்தர்களின் காலனிகள் அடியில் சிக்கிக் கொண்டது திடீரென்று இந்த இரும்பு இருக்கை சாய்ந்ததின் காரணமாக அந்த பகுதியில் இருந்த பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் திடீரென்று இந்த இரும்பு செருப்பு இருக்கை சாய்ந்ததால் பக்தர்கள் அந்த பகுதியில் நிறுத்தி இருந்த வாகனங்களும் சேதங்கள் அடைந்தது. மேலும் திருக்கோயில் பொறியாளர்கள் இந்த இரும்பு இருக்கைகளை செருப்பு வைக்கும் பகுதியை பாதுகாப்பான இடத்தில் பாதுகாப்பான முறையில் வைக்காமல் பொறியாளர்களின் அலட்சியத்தால் பக்தர்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் யார்? பொறுப்பு என்று கேள்வி எழுப்பிய பக்தர்கள் திருக்கோயில் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் இருந்து பக்தர்கள் காலணி வைக்கும் பகுதியை பாதுகாப்பான இடமாக மாற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர் இந்த திடீர் மழையின் காரணமாக மலைக் கோயிலில் மின்சாரம் நிறுத்தப்பட்டதாலும் பக்தர்கள் அவதி அடைந்தனர்.
Next Story