விநாயகர் சிலை கரைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவளத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பாக பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உயர் அதிகாரிகளிடம் ஆய்வு செய்தார்
விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர், பொதுமக்கள் பொது இடத்தில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவர். அவற்றை, செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் மாமல்லபுரம் கல்பாக்கம் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் கடலில் கரைக்க, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின்தினேஷ் மோடக், கூடுதல் ஆணையர் மகேஷ்வரி ஆகியோர், கோவளம் கடற்கரையில் சிலைகள் கரைக்கும் பகுதியை ஆய்வு செய்தனர் தொடர்ந்து சிலைகள் ஏற்றிவரும் வாகனங்களை அனுமதிப்பது அவை கடற்கரை செல்வதும் பின்பு வெளியேறும் வகையில் அணுகு பாதை அமைப்பது, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அது மட்டுமின்றி, சிலைகளை கடலில் இறக்குவதற்கான கிரேன் இயந்திரம் வசதி ஏற்படுத்துவது, தீயணைப்பு வீரர்கள், போலீஸ் பாதுகாப்பு, மருத்துவ வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது ஆய்வின்போது செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, திருப்போரூர் தாசில்தார் வெங்கட்ரமணன், போக்குவரத்து துணை ஆணையர் சமய்சிங்மீனா, பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திக்கேயன், தாம்பரம் துணை ஆணையர் பவன் குமார், உதவி ஆணையர் வெங்கடேசன், பி.டி.ஓ., சிவகலைசெல்வன், ஊராட்சி தலைவர் சோபனா தங்கம் சுந்தர் உட்பட பலர் உடனிருந்தனர்.
Next Story