கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

நாய்கள் தொல்லை கொசு தொல்லையால் தாங்க முடியவில்லை அரசு துறை அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து தங்களோடு உறங்க வாருங்கள் கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு அரசு துறை அதிகாரிகள் முறையாக வருவதில்லை எனவும் கும்மிடிப்பூண்டியில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் குற்றம்சாட்டினர்
நாய்கள் தொல்லை கொசு தொல்லையால் தாங்க முடியவில்லை அரசு துறை அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து தங்களோடு உறங்க வாருங்கள் கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு அரசு துறை அதிகாரிகள் முறையாக வருவதில்லை எனவும் கும்மிடிப்பூண்டியில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் குற்றம்சாட்டினர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர் மற்றும் அமிழ்த மன்னன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் பங்கேற்காத நிலையில் மின்சாரத்துறை சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளும் வராததால் தங்கள் பகுதி மக்களின் குறைகளை தெரிவிக்க முடியவில்லை என கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர் கடந்த ஒரு ஆண்டாக மாதர்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு முறை கூட கொசு மருந்து தெளிப்பது இல்லை என்றும் இதனால் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் பரவுவதாகும் இதுகுறித்து பலமுறை முறையிட்டும் கொசு ஒழிப்பு மருந்தை முறையாக தெளிப்பதில்லை எனவும் உங்களிடம் சொல்லி எந்த பலனும் இல்லை அரசு அதிகாரிகள் வந்து எங்களோடு உறங்குங்கள் என ஒன்றிய கவுன்சிலர் சிட்டிபாபு தெரிவித்தார்.மேலும் நாய்கள் அதிக அளவில் தெருக்களில் சுற்றித் திரிவதாகவும் பலரைக் கடித்துக் குதறுவதாகவும் இது குறித்து பலமுறை தகவல் தெரிவித்தும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் தெரிவித்தனர்
Next Story