சிவகங்கை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சிவகங்கை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
X
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை உட்பட 4 ஒன்றியங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள்/ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு/ கல்லூரிகளுக்கு/இதர கல்வி நிறுவனங்களுக்கு செப்.11 பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் 67-வது நினைவு தின நிகழ்ச்சியினை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படவுள்ளது. வருகின்ற 11.09.2024 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெற இருக்கின்ற இமானுவேல் சேகரன் 67-வது நினைவு தினம் அமைதியாக நடைபெறவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், மாணவ/மாணவியரின் நலன் கருதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள் / ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு / கல்லூரிகளுக்கு / இதர கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறையினை அளித்தும், அதற்கு பதிலாக 21.09.2024 அன்று பள்ளிகள்/ கல்லூரிகள்/ இதர கல்வி நிறுவனங்கள் இயங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story