மரக்காணம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
X
Tindivanam King 24x7 |4 Sept 2024 7:34 PM IST
அமைச்சர் மஸ்தான் பங்கேற்பு
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஓமந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் குமார் முன்னிலையில், ஒன்றிய மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி தலைமையில் நடைபெற்றது, இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை செஞ்சி கே.எஸ் மஸ்தான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி திமுக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலசோனைகளை வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ப.சேகர், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ சீத்தாபதி சொக்கலிங்கம், மாவட்ட பொருளாளர் ரமணன், விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மரக்காணம் ஒன்றிய குழுத்தலைவர் தயாளன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சந்திரன், மத்திய ஒன்றிய ரவிச்சந்திரன், மேற்கு ஒன்றிய துணைச்செயலாளர்கள் ரவிக்குமார், சரவணன், மீனாகுமாரி, ஒன்றிய பொருளாளர் முருகன், மாவட்ட பிரதிநிதிகள் தேவதாஸ், ஆதிகேசவன், ராமமூர்த்தி மற்றும் மாவட்ட கவுன்சிலர்,ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிளை கழக நிர்வாகிகள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story