அரசு பள்ளி ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது..‌..

அரசு பள்ளி ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது..‌..
X
சங்ககிரி: அரசு பள்ளி ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது....
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த தாசநாயக்கன்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் இந்த ஆண்டிற்கான தமிழகரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சங்ககிரி அருகே உள்ள தாசநாயக்கன்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் .பாக்யலட்சுமி. இவர் பள்ளி குழந்தைகளுக்கான கற்றல் குறித்து 200க்கும் மேற்பட்ட அனிமேசன் வீடியோக்களை தாயாரித்து கற்பித்தல், வண்ணமயமான துணைக்கருவிகளை கொண்டு எளிய முரையில் கற்பித்தல், பொம்மலாட்டம் மூலம் பாடம் கற்பித்தல், வகுப்பறையில் செயல் வழிக்கற்றல் கற்பித்தல், பாரம்பரிய விளையாட்டு முறைக்கல்வி, அபாகஸ் கணித பயிற்சி உள்ளிட்டவற்றை செயல்படுத்தி வருவதையடுத்து இவரின் பணிகளை பாராட்டி பள்ளிகல்வித்துறை அவரை தமிழகரசின் நிகழாண்டிற்கான நல்லாசிரியர் விருதிற்கு தேர்வு செய்துள்ளது. அவருக்கு செப்.5ம் தேதி வியாழக்கிழமை சென்னை வண்டலூரில் உள்ள பி.எஸ்.அப்துர்ரகுமான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் வழங்குகிறார். பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ்பொய்யாமொழி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொள்ள உள்ளனர். நல்லாசிரியர் விருது பெற்ற இடைநிலை ஆசிரியைக்கு பள்ளித்தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைகுழு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story