ராமநாதபுரம் சிலம்பம் அரங்கேற்றம் நடைபெற்றது

கமுதியில் தனியார் பள்ளியில் சிலம்பம் அரங்கேற்றம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கமுதி விஜயபாண்டியன் தற்காப்புக் கலை பயிற்சி மையத்தில் சிலம்பம் கற்று வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த சிலம்பம் பயிற்சிக்கான அரங்கற்றம் தொழிலதிபர் போஸ்தேவர் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் கமுதி ஒன்றிய இணைச் செயலாளர் சை.ராமர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிலம்பம் கற்ற மாணவ, மாணவிகள் ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, சுருள்வாள், மான் கொம்பு உள்ளிட்ட பிரிவுகளில் தனியாகவும், குழுவாகவும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் சிறப்பு விருந்தினர்களாக உடற்கல்வி இயக்குனர்கள் மணிமாறன்(அபிராமம் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி), உசேன்(முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி), வீரவேல்முருகன்(கமுதி கே.என்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி), பகவதி அறக்கட்டளை நிறுவனர் மு.வெள்ளைப்பாண்டியன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு விஜயபாண்ôடியன் தற்காப்புக் கலை பயிற்சி மையத்தின் பயிற்சியாளர்கள் செல்வபாண்டியன், ராமர், லெட்சுமணன் ஆகியோர் மாலை அணிவித்து, அரங்கேற்றம் செய்து வைத்து நினைவு பரிசு வழங்கினர்
Next Story