சங்ககிரியில் ஏபிஎன் நூலகத்தில் ஆசிரியர் தினவிழா..‌!

சங்ககிரி:அக்கமாபேட்டை ஏபிஎன் நூலகத்தில் ஆசிரியர் தினவிழா...
சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் உள்ள ஏ.பி.என் நூலகத்தின் சார்பில் ஆசிரியர் தினவிழா நூலக வளாகத்தில் நடைபெற்றது. அக்கமாபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா காந்தி தலைமையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நூலக மேலாளர் பசுமை சீனிவாசன் வரவேற்றார். பேரூராட்சி 10வது வார்டு உறுப்பினர் கனகராஜ், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஜானகி, ஈஸ்வரி, சிந்து, ஆனந்த், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story