ராமநாதபுரம் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது

தமிழகத்திலே விநாயகருக்கு கிருகல்யாணம் நடைபெறுவது எங்கு மட்டும்தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது
ராமநாதபுரம் திருவாடானை அருகே உள்ள உப்பூரில் அருள் மிகு வெயிலுகந்த விநாயகர் திருகோவிழில் திருகல்யாணம் நடைபெற்றது. திருவாடானை அருகே உள்ள உப்பூரில் அருள் மிகு வெயிலுகந்த விநாயகர்  திருகோவிழுக்கு கடந்த செப்டம்பர் 29ம் தேதி கொடியேற்றம் செய்யப்பட்டு 10 நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இன்று எட்டாம் திருவிழாவாக தமிழகத்திலே விநாயகருக்கு இங்குதான் திருமணம் செய்யும் வைபவம் சடைபெறுகிறது. அந்த வகையில் இன்று விநாயகப் பெருமானுக்கு சித்தி புத்தி என இரு தேவியர்களை திருமணம் செய்யும் நிகழ்வு விமர்சையாக நடந்தது.  இங்கு விநாயகப் பெருமானை சூரிய பகவான் பூஜித்த சிறப்பும் மற்று்ம இராமபிரான் தனது மனைவி சீதாவை மீட்பதற்காக இலங்கை செல்லும் வழியில் இங்கு வந்து விநாயகப் பெருமானை வழிபாடு பூஜித்தாகவும் அவரே விநாயகருக்கு சித்தி புத்தி    ஆகியோர்களை திருமணம் செய்து வைத்தார் என்றும் அப்டி செய்தால் தனது மதனைவியான சீதையை மீட்டுவிடலாம் என்று தேவர்கள் கூறியதாக வரலாற்றில் சொல்லப்பட்டடுள்ளதாக கூறப்பட்டது.    அதன் பொருட்டு இன்று ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் விநாயகப் பெருமானுக்கு சித்தி புத்தி தேவியாருடன் வெகு விமர்சையாக திருக்கல்யாணம் நடைபெற்றது  விநாயகர் சதுர்த்தி அன்று பூக்குழி உற்சவ விழாவும் வெகு விமர்சையாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து மறுநாள் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது
Next Story