ராமநாதபுரம் திருவாடனை விவசாய பணிகள் தீவிரம் காட்டிய விவசாயிகள்

திருவாடனையில் விவசாய பணிகள் தீவிரம் காட்டிய விவசாயிகள்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் அளவிற்கு அதிக அளவில் இங்கு நெல் விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது விதைப்பு காலம் தொடங்கி விட்ட நிலையில் விவசாயிகள் நெல விதைப்பு பணிகளில்  தீவீரம் காட்டி வருகின்றனர். ப முன்னதாக வரப்புகளில் உள்ள களைகலை அழிக்கும் வண்ணம் களைக்கொல்லி தெளித்து புற்களை அளித்த பிறகு விதைப்பை தொடங்குகின்றனர்.தற்போது 25 கிலோ மூட்டை டீலக்ஸ் ரக நெல் 1300 முதல் 1400 வரை விற்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு  1180 க்கு விற்கப்பட்ட நெல் இந்த முறை 150 ரூபாய்  முதல் 200 ரூபாய் கூடுதலாக விற்கப்படுவதாக கவலை தெரிவித்தனர். தற்போது விதைப்பு பணிகளில் ஆங்காங்கே விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண்மை துறை சார்பில் விதை நெல் அதிக விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்றும் ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
Next Story