ராமநாதபுரம் கேட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் உற்சாக வரவேற்பு

தேசிய அளவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் தங்கம் வெள்ளி வென்ற வீரர்களுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த மல்யுத்த வீரர்கள் தேசிய அளவில் தங்கம்,வெள்ளி, வெங்கலம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். ஹரியானா மாநிலத்தில் ஆகஸ்ட் 30 ,31 செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான கிராபிலிங் மல்யுத்த போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்ட பரமக்குடி அலங்கார மாதா மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி கனிஷ்ஸ்ரீ 56 கிலோ எடைபிரிவில் ஒரு தங்கப்பதக்கமும் ,ஒரு வெள்ளி பதக்கமும் 52 கிலோ எடைப்பிரிவில் கனிஷ்கா, 60 பிரபாகரன், 49 முகிலரசன் ஆகிய மாணவரகள் 3 வெள்ளி பதக்கமும்,2 வெங்கல பதக்கமும் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து உள்ளனர் இப்போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற வீரர்கள் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற உள்ள ஆசிய மல்யுத்த போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் இந்தநிலையில் இன்று சொந்த ஊர் திரும்பிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கவிப் பிரகாஷ் ஆகியோரை ஆசிரியர்கள் பெற்றோர்கள் பட்டாசு வெடித்து பொன்னாடை போர்த்தி மேளதாளங்களுடன் உற்சாகமாக வரவேற்றனர்..
Next Story