முதியோர் இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு

முதியோர் இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு
X
குமாரபாளையம் முதியோர் இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஓலப்பாளையம் பகுதியில் பாசம் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கியுள்ளனர். இதனை காவேரி நகர் குமார் நிர்வகித்து வருகிறார். சமூக நலத்துறை அதிகாரி காயத்ரி தலைமையிலான அதிகாரிகள் இந்த இல்லத்தில் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். முதியோர் பராமரிப்பு, உணவு வழங்குதல், பதிவேடுகள் பராமரித்தல் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டனர். அங்கு தங்கியுள்ள முதியவர்களிடம் உணவு, வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். நிர்வாகி குமார் இது குறித்து கூறியதாவது: இந்த மையத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அரசு அனுமதி பெற வேண்டும் என்று நடைமுறை உள்ளதால், அரசு அனுமதிக்கு விண்ணப்பம் செய்தோம். மாவட்ட கலெக்டர் உத்திரவின்படி, சமூக நலத்துறை அலுவலர்கள் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். தங்கும் இடம், உணவு உண்ணும் இடம், படுக்கைகள், கழிப்பிடங்கள், சமையலறை, ஸ்டோர் ரூம், மேலும் தங்கி உள்ளவர்கள் விபரம், வரவு, செலவு பதிவேடுகள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story