விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

விநாயகர் சதுர்த்தியையொட்டி குமாரபாளையம் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி குமாரபாளையம் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, உடையார்பேட்டை, ராஜவிநாயகர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. நடனவிநாயகர் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவிலில் உள்ள கல்யாண விநாயகர் கோவில், பஸ் ஸ்டாண்ட் கற்பக விநாயகர் கோவில், நடராஜா நகர் விநாயகர் கோவில், விட்டலபுரி கொலு பிள்ளையார், கள்ளிபாளையம் விநாயகர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
Next Story