சங்ககிரி மலையில் உள்ள குடைவரை விநாயகருக்கு சதுர்த்தி சிறப்பு பூஜைகள்....

சங்ககிரி மலையில் உள்ள குடைவரை விநாயகருக்கு சதுர்த்தி  சிறப்பு பூஜைகள்....
X
சங்ககிரி: மலை மீது உள்ள குடைவரை விநாயகருக்கு சதுர்த்தி சிறப்பு பூஜைகள்...
சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள குடைவரை விநாயகருக்கு சதுர்த்திர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சங்ககிரி மலைக்கோட்டையில் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு பின்புறம் ஒரே பாறையினுள் ஒரே பாறைக்கல்லில் உருவான குடைவரை விநாயகருக்கு சதுர்த்தியையொட்டி பால், தயிர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், இளநீர், பன்னீர், சொர்ணாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், நடைபெற்ற பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விநாயகருக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை வைத்து நைவேத்தியம் படைக்கப்பட்டது . பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச்சென்றனர். முன்னதாக கோயில் வளாகத்தில் வளர்ந்திருந்த களர்செடிகளை தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் அகற்றி தூய்மைபடுத்தினர்.
Next Story