இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட சிலை பறிமுதல்

இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட சிலை பறிமுதல்
X
திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலையில் உள்ள பாறைப்பட்டி பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த சிலையை போலீசார் பறிமுதல் செய்து நீர் நிலையில் கொண்டு சென்று கரைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் 900 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திண்டுக்கல் சாலையில் உள்ள பாறைப்பட்டி பகுதியில் மட்டும் ஊர் பொதுமக்கள் சார்பில் வைக்கப்படும் விநாயகர் சிலையை தவிர எந்த அமைப்பினருக்கும் சிலை வைக்க போலீசார் அனுமதிப்பதில்லை. இந்நிலையில் வருடா வருடம் இந்து முன்னணி சார்பில் அங்குள்ள காளியம்மன் கோவிலில் அனுமதியை மீறி விநாயகர் சிலை வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு திண்டுக்கல் பாறைப்பட்டி காளியம்மன் கோவிலில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் பொதுமக்களுடன் இணைந்து ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்க முயன்றனர். இதை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் சிலையை பறிமுதல் செய்து வருவாய்த்துறையினருடன் இணைந்து திண்டுக்கல் கோட்டை குளத்தில் பாதுகாப்பாக கொண்டு சென்று கரைத்தனர். தடையை மீறி ஊர்வலம் நடத்திய பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனை ஒட்டி இந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்ப்பட்டது.
Next Story