திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

திமுகவிற்கு உழைக்கும் தொண்டர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் கூட்டுறவு சங்க தேர்தல் போன்றவற்றில் பல்வேறு பதவிகள் கிடைக்கும் என்றும் கும்மிடிப்பூண்டியில் புதிதாக இடம் வாங்கப்பட்டு முன்னால் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் வேணுவிற்கும் சிலை அமைக்கப்படும் எம்எல்ஏ
திமுகவிற்கு உழைக்கும் தொண்டர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் கூட்டுறவு சங்க தேர்தல் போன்றவற்றில் பல்வேறு பதவிகள் கிடைக்கும் என்றும் கும்மிடிப்பூண்டியில் புதிதாக இடம் வாங்கப்பட்டு முன்னால் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் வேணுவிற்கும் சிலை அமைக்கப்படும் என்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் தெரிவித்தார் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்முடிபூண்டி தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் அங்குள்ள எஸ் வி கே தனியார் திருமண மண்டபத்தில் இன்று ஒன்றிய கழகச் செயலாளர் கிவே ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை கட்சியினருக்கு வழங்கி பேசினார் உள்ளாட்சித் தேர்தல் கூட்டுறவு சங்க தேர்தல் விரைவில் வர உள்ளதாகவும் கட்சியினர் பல்வேறு பதவிகளை பெற உள்ளார்கள் என்றும் கும்மிடிப்பூண்டியில் திமுக சார்பில் புதிதாக நிலம் வாங்கப்பட்டு கலைஞர் சிலை முன்னாள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கி வேணு அவர்களின் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் மு க ஸ்டாலின் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு 234 தொகுதிகளுக்கு 200 இடங்களில் வெற்றி பெற இலக்கை வைத்து செயல்பட்டு வருவதாகவும் அந்த வெற்றிக்காக கட்சியினர் சிறப்பாக பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்
Next Story