அதிமுக குளித்தலை கிழக்கு ஒன்றியம் சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

அதிமுக குளித்தலை கிழக்கு ஒன்றியம் சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
X
வீடு வீடாகச் சென்று அடையாள அட்டை வழங்கிய கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட இனுங்கூர் கிழக்கு & மேற்கு, காசாகாலணி, தெற்குகாலணி, திடீர்குப்பம், ரெத்தினபுரிகாலணி ஆகிய பகுதிகளில் அதிமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் வீடு வீடாக சென்று கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று உறுப்பினர்களை சந்தித்து அடையாள அட்டை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் இளங்கோவன், எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் சத்துணவு ராதா, இனுங்கூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேல், மாவட்ட பிரதிநிதி இளையராணிரமேஷ், அம்மா பேரவை இணைச் செயலாளர் தவமணி, கிழக்கு ஒன்றிய விவசாயி அணி தலைவர் மதிவாணன், விவசாய அணி பொருளாளர் ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கல்யாணராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story