இந்து கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சீர்வரிசை கொண்டு சென்ற இஸ்லாமிய மக்கள்.

மங்கலத்தில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்
பல்லடம் அடுத்த மங்கலத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ தேவி பூதேவி ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.கோவில் புணரமைப்பு பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா வெகு சிறப்பான முறையில் நடைபெற்ற வருகிறது.நாளை காலை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கும்பிஷேகத்தை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் மங்கலத்தில் உள்ள பெரியபள்ளி வாசல் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இந்த நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் கொடுத்த அழைப்பை ஏற்று பெரியபள்ளி வாசல் நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று அந்த கோவிலுக்கு பழம்,தாம்பூல தட்டு,பூ,இனிப்பு வகைகள் உள்ளிட்ட சீர்வரிசைகளை எடுத்து வந்து கோவில் நிர்வாகத்தினரிடம் அளித்தனர்.சீர்வரிசை கொண்டு வந்த இஸ்லாமியருக்கு கோவில் நிர்வாகத்தினர் மாலை அணிவித்து வரவேற்பளித்தனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி திரிசனம் பெற்றனர்.பல்லடம் அருகே இந்து கோவிலுக்கு இஸ்லாமிய மக்கள் சீர்வரிசை கொண்டு சென்று வழங்கிய சம்வம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story