ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு சோதனை நடத்திய காவல்துறையினர்.

ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு சோதனை நடத்திய காவல்துறையினர்.
ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு சோதனை நடத்திய காவல்துறையினர். கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற வழக்கம். இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மனுக்கள் அளிப்பதற்காக வருவார்கள். ஒரு சிலர் தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மன்னனை அல்லது பெட்ரோல் கொண்டு வந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மற்ற பணிகளும் பாதிக்கப்படுவதால் காவல்துறையினர் மனு அளிக்க வரும் பொது மக்களை பரிசோதனை செய்த பிறகே ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளே அனுமதிக்கின்றனர். இதன் அடிப்படையில் இன்று நடைபெறும் குறைதீர் கூட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் கொண்டு வந்த பைகளை சோதனையிட்டு, அவர்கள் வைத்திருந்த குடிநீர் பாட்டிலையும் திறந்து, குடிநீரா? அல்லது மண்ணெண்யா? அல்லது பெட்ரோலா? என முகர்ந்து பார்த்து சோதனை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
Next Story