மருதூர் பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

பேரூராட்சி மன்ற தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் சகுந்தலா சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் செயல் அலுவலர் பானு ஜெயராணி குழந்தைக‌ள் பாதுகாப்பு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார். தொடர்ந்து அலுவலக இளநிலை உதவியாளர் சரவணகுமார் மாவட்ட நிர்வாகத்தால் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட முத்தான மூன்று திட்டங்கள் நிமிர்ந்து நில் துணிந்து சொல், இளந்தளிர் இல்லம் ,அகல் விளக்கு, பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு ஆகிய மூன்று திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார். தொடர்ந்து ஆதிநத்தம் மருதூர் பணிக்கம்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கீதா விஜயலட்சுமி ராமகிருஷ்ணன். கிராம நிர்வாக அலுவலர்கள் பார்த்திபன், விஜயா, கோவர்த்தனா, சுகாதார ஆய்வாளர் ராஜா, கவுன்சிலரும் திட்டக் குழு உறுப்பினருமான தமிழரசன் ஆகியோர்கள் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை காத்தல் மற்றும் உறுதி செய்தல் குழந்தைகளுக்கு எதிரான தீங்கிழைத்தல் தடுத்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்படுத்துதல் குறித்து விரிவாக பேசினார்கள். இதில் மருதர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எங்கள் பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது மேலும் பொதுமக்கள் கால்நடைகள் பள்ளி வளாகத்திற்கு வந்து செல்வதாலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முன்வருவதில்லை பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து மாணவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். திட்டக்குழு உறுப்பினர் தமிழரசன் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது மேலும் உங்களது கோரிக்கை மீது ஒரே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்தக் கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் அலுவலக பணியாளர்கள் சுகாதார மேற்பார்வையாளர் பாக்கியம். மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கிராம உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story