வால்பாறை பகுதியில் மது போதையில்போக்குவரத்துக்கு இடையூறு செய்து அரசு பேருந்து ஓட்டுனரையும் பணியில் இருந்த காவலர்களையும் பணி செய்யவிடாமல் தடுத்து ரகலையில் ஈடுபட்ட பாஜகவினர் கைது

வால்பாறை பகுதியில் மது போதையில்போக்குவரத்துக்கு இடையூறு செய்து அரசு பேருந்து ஓட்டுனரையும் பணியில் இருந்த காவலர்களையும் பணி செய்யவிடாமல் தடுத்து ரகலையில் ஈடுபட்ட பாஜகவினர் கைது
X
வால்பாறை பகுதியில் மது போதையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்து அரசு பேருந்து ஓட்டுனரையும் பணியில் இருந்த காவலர்களையும் பணி செய்யவிடாமல் தடுத்து ரகலையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் 6 பேர் கைது.,
வால்பாறை பகுதியில் மது போதையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்து அரசு பேருந்து ஓட்டுனரையும் பணியில் இருந்த காவலர்களையும் பணி செய்யவிடாமல் தடுத்து ரகலையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் 6 பேர் கைது., பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் வால்பாறையை சுற்றி பார்க்க வந்துள்ளனர் இந்நிலையில் அக்காமலை எஸ்டேட் செல்லும் சாலையில் வாகனத்தை தடை செய்யப்பட்ட பகுதியான நோ பார்க்கிங்கில் நிறுத்தி சென்றுள்ளனர்., இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது இந்நிலையில் அவ்வழியாக வந்த அரசு பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனரும் பொதுமக்களும் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் வாகனத்தை எடுக்குமாறு கூறியுள்ளனர் ஆனால் அங்கு மது போதையில் இருந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் தகாத வார்த்தைகளால் பேசியும் ரகலையிலும் ஈடுபட்டுள்ளனர் மேலும் காவல்துறையினர் தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த நிலையில் வாகனத்தை எடுக்குமாறு கூறி போக்குவரத்தை சரி செய்தபோது பெண் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்யவிடாமல் ரகலையில் ஈடுபட்டுள்ளனர்., இதை அடுத்து அரசு பேருந்து ஓட்டுநர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்குவரத்துக்கு இடையூறு செய்து ரகலையில் ஈடுபட்ட திருப்பூரைச் சேர்ந்த பாஜக கட்சியின் மண்டல பொதுச் செயலாளர் முரளிதரன் 35 வயது துரைமுருகன் 36 வயது வெங்கடேஷ் 25 வயது கோதண்டம் 40 வயது சசிகுமார் 40 வயது ஆகிய ஆறு பேரையும் கைது செய்து அவர்கள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்., வால்பாறைக்கு பகுதிக்கு சுற்றுலா வந்த பாஜக நிர்வாகிகள் மது போதையில் ரகலையில் ஈடுபட்டது வால்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.,
Next Story