ஆர்.கே பேட்டை ஒன்றியத்தில் கிராம சபையை புறக்கணித்த கிராமங்கள்

ஆர்.கே பேட்டை ஒன்றியத்தில் கிராம சபையை புறக்கணித்த கிராமங்கள்
X

ஆர்.கே பேட்டை ஒன்றியத்தில் கிராம சபையை புறக்கணித்த கிராமங்கள்

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. சின்னநாகபூண்டி ஊராட்சியில் கடந்த காலங்களில் கிராம சபையில் நிறைவேற்றிய சேதமடைந்துள்ள மேல் நிலைநீர் தேக்க தொட்டி அகற்றி புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கவும், ஏரி வரவு கால்வாய் சீரமைக்க, ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டி 2 ஆண்டுகள் முடிந்த நிலையில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், இதுவரை திறக்கப்படாமல் உள்ளது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றியும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கிராமமக்கள் கிராமசபை கூட்டத்தை புறக்கணிப்பு செய்தனர். இதனை அடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் செந்திகுமார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் தலைமையில் கிராமசபை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. அம்மையார்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்றது. கே.பி.என்.கண்டிகையில் கால்நடை துணை மருந்தகம், அம்மையார்குப்பத்தில் அதிநவீன ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சந்திரவிலாசபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் வி.ஜி.மோகன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனகராஜகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் ராமசாமி, பாலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.வி.தென்னரசு தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காந்தி ஜெயந்தி முன்னிட்டு ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகாத்மா காந்தி முழு உருவ சிலைக்கு மலை அணிவித்து மரியாதை செலுத்தினார் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி,ஒன்றிய குழு தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன், ஒன்றியக் குழு துணை தலைவர் திலகவதி ரமேஷ்,ஒன்றிய கவுன்சிலர்கள், பிரமிளா வெங்கடேசன்,உமபதி, செல்வி சந்தோஷ் தனலட்சுமி காலஸ்தீஸ்வரன், சிவகுமார், திருநாவுக்கரசு, உட்பட மலர் கலந்து கொண்டனர்

Next Story