வெண்ணைமலை அருகே போதை மாத்திரைகளை விற்க முயன்ற மூவரில் இருவர் கைது.
Karur King 24x7 |3 Oct 2024 2:33 PM IST
வெண்ணைமலை அருகே போதை மாத்திரைகளை விற்க முயன்ற மூவரில் இருவர் கைது.
வெண்ணைமலை அருகே போதை மாத்திரைகளை விற்க முயன்ற மூவரில் இருவர் கைது. கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் அக்டோபர் 1ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில், வெண்ணைமலை பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நாமக்கல் மாவட்டம், மோகனூர், நடுத்தெருவை சேர்ந்த ரூபன் வயது 22 என்பவரும், நாமக்கல் மாவட்டம், ஓலப்பாளையம், குடித்தெருவை சேர்ந்த இலியாஸ் வயது 25 என்பவரும் விற்பனை செய்வதற்காக போதை மாத்திரைகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூபாய் 2570 மதிப்புள்ள மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இருவரிடமும் விசாரணை மேற்கொண்டபோது, இந்த மாத்திரைகளை, நாமக்கல் மாவட்டம், வேலூர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவரிடம் வாங்கியதாக கூறியுள்ளனர். எனவே மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரூபன் மற்றும் இலியாஸ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய கார்த்தி-யை தேடி வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Next Story