கடன் தொல்லையால் கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை

  கடன் தொல்லையால் கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை
X
நித்திரவிளை அருகே
குமரி மாவட்டம் நித்திரவிளை  அருகே உள்ள புல்லாணிவிளை பகுதியை சேர்ந்தவர் சுனில் (42) கொத்தனார். இவருக்கு அஜிதா (35) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.       அஜிதா அந்த  பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். சுனில் புதிதாக வீடு கட்டி உள்ளார். இதனால் அதிக கடன் சுமை ஏற்பட்டுள்ளது. கடன் தொல்லை காரணமாக சுனில் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து உள்ளதாக கூறப்படுகிறது.       இந்த நிலையில் நேற்று காலை தனது வீட்டில் உள்ள மேல் மாடியில் உள்ள அறையில் உறங்கி கொண்டிருந்தார். மனை வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். குழந்தைகள் 2 பேரும் சகோதரர் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளனர்.        மதிய வேளையில் சுனிலை சாப்பிட அழைப்பதற்காக அவர் தாயார் சென்றபோது அங்கு சுனில் தூக்கிட்டு தற்கொலை செய்து நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக நித்திரவிளை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.        போலீசார் சம்பவ இடம் வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story