கிடாரிபட்டி ஊராட்சியில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்
Sholavandan King 24x7 |3 Oct 2024 3:25 PM IST
முகாமில் கிடாரிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதி ஆண்கள் பெண்கள் முதியோர்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
* மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருகே கிடாரிப்பட்டி ஊராட்சியில் எஸ்டிபிஐ கட்சி கிடாடிப்பட்டி கிளை மற்றும் மேலூர் ஜாஸ் கிளினிக் சார்பாக இலவச பொது மருத்துவ முகாம் கிளை தலைவர் முஹம்மது உசேன் ஷரீஃப் தலைமையில் கிளை பொருளாளர் ஆசாத் கான் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ மதுரை வடக்கு மாவட்ட தலைவர் பிலாலுதீன் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புல்லான் மேலூர் வட்டாட்சியர் செந்தாமரை ஆகியோர் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தனர். முகாமில் கிடாரிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதி ஆண்கள் பெண்கள் முதியோர்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்வில் மேலூர் தொகுதி SDPI தலைவர் முஹம்மது தாஹா,ஒன்றிய இணைச் செயலாளர் சித்திக்,ஒன்றிய தலைவர் அபுதாகிர் ஒன்றிய செயலாளர் சையது இப்ராஹிம்,தலைவர் சாகுல் ஹமீது கிளைச் செயலாளர் நாகூர் பிச்சை பொதுக்குழு பார்வையாளர் பாரூக் இணைச்செயலாளர் அப்துல் ரகுமான், செல்வம் மதி உட்பட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story