புழல் சிறையில் உலக தரத்தில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் : அமைச்சர்
Tiruvallur King 24x7 |3 Oct 2024 4:04 PM IST
புழல் சிறையில் உலக தரத்தில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அனைத்து சிறைக் கைதிகளுக்கு என்ன நடைமுறைகளோ என்ன அதுவே அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் கடைபிடிக்கப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் த ரகுபதி தெரிவித்தார்
புழல் சிறையில் உலக தரத்தில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அனைத்து சிறைக் கைதிகளுக்கு என்ன நடைமுறைகளோ என்ன அதுவே அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் கடைபிடிக்கப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் த ரகுபதி தெரிவித்தார் திருவள்ளூர் மாவட்டம் புழல் மத்திய சிறையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதிதாக அமைக்கப்பட்ட வழக்கறிஞர்கள் அறை சிறைவாசிகளை காண வருபவர்கள் தங்கும் அறை உள்ளிட்டவர்களை திறந்து வைத்து பார்வையிட்டு சிறைவாசிகள் தகவல் தொடர்பு பயன்படுத்தும் intercom முறையில் அவரே பேசி சோதனை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தமிழக சிறைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தலில் வழக்கறிஞர்கள் சிறை சிறைவாசிகள் காண வருபவர்களுக்கு அறை உள்ளிட்ட நவீன வசதிகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் உலக தரமிக்க வகையில் கைதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதாகவும். திரைவாசிகளுக்கு தரமான உணவுகள் தரப்படும் வழங்கப்படுவதாகவும் அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் சிறைவாசிகள் அதிக நேரம் சிறைவாசிகளை காண வருபவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாத வகையில் மேம்படுத்தப்பட்ட வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இன்டர்காமை ஒட்டு கேட்கும் குற்றச்சாட்டை அவர் மறுத்து பேசுகையில் அது போன்று ஒட்டு கேட்கும் முறை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் சிறைவாசிகளுக்கு தரமான கழிவறைகள் மற்றும் தங்குமறைகள் உள்ளதாகவும் அதில் எந்த குறையும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். மேலும் தண்டனை கைதிகள் தொழில் பயிற்சி கேட்டு விண்ணப்பித்தால் அவர்களுக்கு தேவையான தொழில் வழங்க அரசு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார் மேலும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எந்த மேம்படுத்தப்பட்ட வசதிகளும் சிறையில் செய்து தரவில்லை அவருக்கென தனி உணவும் தரப்படவில்லை அவர் அதற்கான கோரிக்கையும் வைக்கவில்லை அனைத்து சிறைக் கைதிகளுக்கு என்ன நடைமுறைகளோ என்ன அதுவே அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் கடைபிடிக்கப்பட்டது. என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் சிறைகள் மற்றும் சீர் சீர்திருத்த பணிகள் தலைமை இயக்குனர் மகேஸ்வர் தயாள் சிறைத்துறை அதிகாரிகள் திரு முருகேசன் திரு கனகராஜ் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்
Next Story