கிராமப்புற மக்களின் கனவு - கலைஞரின் கனவு இல்ல திட்டம்

கிராமப்புற மக்களின் கனவு - கலைஞரின் கனவு இல்ல திட்டம்
X
வீடு இல்லாத கிராமப்புற மக்களின் கனவுகளை நிறைவேற்றும் திட்டமாக கலைஞரின் கனவு இல்ல திட்டம் உள்ளது துரைராஜ் நகர் இல்லத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் துரைராஜ் நகர் இல்லத்தில் ஆத்தூர் தொகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது கிராம மக்கள் சிலர் கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் வீடுகள் வேண்டுமென கோரிக்கை மனு கொடுத்தனர் அதை பெற்றுக்கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் இந்தியாவிலேயே இதுவரை இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், பாரதபிரதமர் வீடு வழங்கும் திட்டம் மற்றும் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பசுமை வீடுகள் வழங்கப்பட்டன. இவற்றின் மூலம் வீடுகள் கட்டுவதற்கு சிரமமாக இருந்ததால் ஒருசில கிராம மக்கள் வீடுகளை கட்ட முடியாமலும், கட்டிய வீடுகளை விற்றும் உள்ளனர். அதற்கு காரணம் வீடு வழங்கும் திட்டம் மூலம் குறைவான நிதி வழங்கப்பட்டதால்தான் ஆனால் திராவிட மாடல் ஆட்சி நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏழை எளிய மக்களின் நிலைமைய உணர்ந்து குறிப்பாக கிராமப்புற மக்களின் நலன் கருதி கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு ரூ.3.5லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் மூலம் கிராமப்புற ஏழை மக்கள் அனைவரும் கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் வீடுகளை கட்டிக்கொள்ளலாம் என்றார். இதுதவிர ஆத்தூர் தொகுதியில் சுமார் 2500 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளை எளிதாக கட்டி முடிக்க அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சலுகை விலையில் வீடுகள் கட்டுவதற்கான தளவாட சாமான்களை கொடுத்து வருகிறோம் என்றார். அரசு வேலை வாய்ப்பு வேண்டி கிராமப்புற பெண்கள் பலர் மனு கொடுத்துள்ளனர். ஆத்தூர் தொகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்றைமட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எப்படி நியாயவிலை கடைக்கான பணியாளர்களுக்கான ஆணை ஒரு ரூபாய் கூட இல்லாமல் வழங்கப்பட்டதோ அதுபோல அரசு பணிக்கான வேலை வாய்ப்புகள் தகுதியுள்ள படித்த கிராமப்புற மற்றும் நகரங்களை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றார். பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுக்க காத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்தவுடன் கண்வலியையும் பொருட்படுத்தாது பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார் நிகழ்ச்சியின் போது திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தண்டபாணி, ஆத்தூர் நடராஜன், ஒன்றிய செயலாளர்கள் திண்டுக்கல் நெடுஞ்செழியன், பிள்ளையார்நத்தம் முருகேசன், நிலக்கோட்டை மணிகண்டன், திமுக நிர்வாகி அம்பை ரவி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இல.கண்ணன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்கள் கும்மம்பட்டி விவேகானந்தன், பஞ்சம்பட்டி மணி, பொதுக்குழு உறுப்பினர் அக்பர், அகரம் பேரூராட்சிமன்ற தலைவர் மணி (எ) நந்தகோபால், துணைத்தலைவர் ஜெயபால், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பண்ணைப்பட்டி அருண், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பொன்முருகன், ஒன்றிய வர்த்தகர் அணி அமைப்பாளர் கமலகோபி, மாவட்ட கவுன்சிலர் சுதாசெல்வி ஆரோக்கியமேரி, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கே.புதுக்கோட்டை ரமேஷ், மாணவரணி அமைப்பாளர் செல்வம், திண்டுக்கல் கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார், ரெட்டியார்சத்திரம் நிலவள வங்கி முன்னாள் செயலாளர் சக்கரவர்த்தி (எ) மணிமாறன், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் முன்னாள் பெருந்தலைவர் சின்னதாய் குமாரலிங்கம், முன்னாள் ஒன்றியகுழு உறுப்பினர் கொம்பன் (எ) பாலசுப்பிரமணி, திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் நெல்லை சுபாஷ், 7வது வார்டு திமுக நிர்வாகி நரசிங்கம், வீரபாண்டி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Next Story