நூலக கல்வி சேவை தொடக்க விழா
X
Maduranthakam King 24x7 |6 Oct 2024 8:09 PM IST
நூலக கல்வி சேவை தொடக்க விழா
நூலக கல்வி சேவை தொடக்க விழா லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வி சேவையை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம் மேலவளம்பேட்டை பகுதியில் உதவும் கரங்கள் செயல்பட்டு வருகிறது.. அதன் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நூலக கல்வி சேவை தொடக்க விழா சமூக சேவகர் சரவணன் ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், தலைமை ஆசிரியை தாட்சாயணி, சமூக சேவகர் சங்கர், ஆகியோர் கலந்துகொண்டு நூலக கல்வி சேவை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பள்ளி சீருடை, புத்தகம் உள்ளிட்டவைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மேலவளம் பேட்டை சேர்ந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உதவும் கரங்கள் நிர்வாகிகள்அனைவரும் கலந்து கொண்டனர்.
Next Story